ஜனவரி- 1 - உலக குடும்ப தினம் (Global Family Day)
ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும்,
பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். உலக முழுவதும் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பம்.
நாட்டிற்கிடையே எந்த போரும்,
பொறாமையும் இன்றி வாழ வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.