டிசம்பர் 5 - 'சர்வதேச தன்னார்வலர்கள் தினம்' (International Volunteer Day for Economic and Social Development
மக்களின் மேம்பாட்டுக்காக எந்தப் பிரதிபலனும் இல்லாது, இதுபோன்ற பேரிடர் காலங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மக்கள் ஆர்வமாக முன் வந்து தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும். இந்த எண்ணத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் 1985ம் ஆண்டு 'சர்வதேச தன்னார்வலர்கள் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ம் தேதி தன்னார்வலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.