Search This Blog

டிசம்பர் 2 தேசிய மாசு தடுப்பு தினம்

தேசிய மாசு தடுப்பு தினம்

டிசம்பர் 2-ஆம் தேதி தேசிய மாசு தடுப்பு தினமாகக் இந்தியாவில் கடைபிடிக்கப் படுகிறது. போபால் நச்சுவாயு விபத்தில் மரணமடைந்தவர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

1984, 2-3 ஆம் தேதி இரவில் போபால் வாயுக்கசிவு துயரம் நிகழ்ந்தது. மீதைல் சையனேட் என்ற நச்சு வாயுவால் பலர் இறந்தனர். இது உலக அளவில் தொழிற்சாலை மாசால் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாகும்.

இந்நாளின் நோக்கங்கள் :
தொழிற்சாலைப் பேரிடர்களைத் தடுப்பதும் கையாளுவதும் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது.

தொழிற்சாலை முறைகளாலும் மனித அலட்சியத்தாலும் உருவாகும் மாசைத் தடுத்தல்
மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்படுத்துதல்.

சில தடுப்பு முறைகள் பற்றிய இந்திய சட்டங்கள்:
★நீர் ( மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974
★நீர் ( மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) வரிச் சட்டம் 1977
★காற்று (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981
★சுற்றுபுறச்சூழல் (பாதுகாப்பு) விதிகள் 1986
★சுற்றுபுறச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986
★ஆபத்தான வேதிப்பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள் 1989
★மறுசுழற்சி பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு விதிகள் 1999
★ஓசோன் பாதிப்பு பொருட்கள் (முறைபடுத்துதல்) விதிகள் 2000
★ஒலி மாசு (முறைப்படுத்துதலும் தடுத்தலும்) விதிகள் 2000
★பேட்டரிகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2001
★மகாராஷ்ட்டிரா மக்கும் குப்பை (கட்டுப்பாட்டு) அவசரச்சட்டம் 2006
★சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006

பலவிதமான மாசால் நீர், காற்று, நிலம், காடு போன்ற இயற்கை வளங்கள் வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, இந்த விதிகளையும் முறைகளையும் நடைமுறைப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து மாசைக் குறைக்க வேண்டியது முக்கியமாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url