டிசம்பர் 2 தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் December 2 National Pollution Control Day
வரலாறு..
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இரவு, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்த விஷ வாயு கசிவு சம்பவத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக 2260 பேர் மூச்சு திணறி செத்தனர். இந்தச் சம்பவம் யூனியன் கார்பைட் கெமிக்கல் நிறுவனத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 50,000 பேர் பலியானர்கள்.
இந்தத் தினத்தை நினைவுப்படுத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியச் சொல், மாசுக் கட்டுப்பாடு. மாசு நிறைந்த வெளியேற்றங்களும், கழிவுகளும் காற்று, நீர் / நிலம் போன்றவற்றில் கலப்பதை கட்டுப்படுத்துவதே மாசுக் கட்டுப்பாடு என வரையறுக்கப்படுகிறது.
மாசு ஏற்படுவதை தடுத்தல், வீணாவதை குறைத்தாலும் மாசுக் கட்டுப்பாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
மாசு கட்டுப்பாட்டு முக்கிய 5 முறைகள்
1. மறு சுழற்சி (Recycling)
2. மீண்டும் பயன்படுத்துதல் (Reusing)
3. பயன்பாட்டைக் குறைத்தல் Reducing)
4. மாசடைதலைத் தடுத்தல் (Preventing)
5. மக்கிய உரங்களை உருவாக்கிப் பயன்படுத்தல் (Compost)
இந்த ஐந்து முறைகளை பின்பற்றினாலே பெருமளவு மாசுபடுதலை குறைத்து விட்லாம்.