டிசம்பர் 15 -சர்வதேச தேயிலை தினம்:
சர்வதேச தேயிலை தினம் டிசம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல்முறையாக 2005 டிசம்பர் 15ஆம் தேதி புதுடில்லியில் கொண்டாடப்பட்டது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர்கள் மற்றும் தேயிலையைப் பயன்படுத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அரசாங்கத்திற்கும், குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.