நவம்பர் 12 - உலக நுரையீரல் அழற்சி தினம்(World Pneumonia Day)
நிமோனியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும்.
இது கிருமித்தொற்றினால் ஏற்படுகிறது. இதனால் இருமல்,
காய்ச்சல், அதிக வியர்வை,
பசியின்மை அதிகளவு சளி மற்றும் அசௌகரிய நிலை என்பன காணப்படும். சிகிச்சை அளித்தால் பூரண குணமடையலாம். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2009ஆம் ஆண்டில் இத்தினத்தை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.