Search This Blog

செப்டம்பர் 5

ராதாகிருஷ்ணன்:

டாக்டர் ராதாகிருஷ்ணனை போற்றும் விதத்தில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை
நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.

🏁 நாட்டின் 2-வது ஜனாதிபதியும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன்
1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி
என்ற கிராமத்தில் பிறந்தார்.

🏁 இவரைப் பார்த்து 'நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக
உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன்" என்றாராம் காந்தி. 'அனைவருக்கும்
ஆசிரியர் போன்றவர் ராதாகிருஷ்ணன். அவரிடம் கற்க ஏராளமான விஷயங்கள் உள்ளன"
என்று நேரு புகழ்ந்துள்ளார்.

🏁 நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக 1952-ல்
தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின்
உயரிய 'பாரத ரத்னா" விருது 1954-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

🏁 ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 87-வது வயதில் (1975) மறைந்தார்.
----------------

வ. உ. சிதம்பரம் பிள்ளை:

🏁 வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை
1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள
ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார்.

🏁 ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. 1906 ஆம் ஆண்டு
அக்டோபர் 16 ஆம் நாள் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், வ.உ.சி. செயலராகவும்
பதவி ஏற்றுக் கொண்டனர்.

🏁 வ.உ.சி. விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும்
புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய
உரை எழுதி வெளியிட்டார்.

🏁 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் சிதம்பரனார் இயற்கை எய்தினார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னைத் துறைமுகத்தின் வாயிலில் உள்ள சிதம்பரனார்
சிலையும், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு எதிரில் உள்ள அவர் சிலையும்
அவரின் தியாக வாழ்வை என்றென்றும் தமிழர்களுக்கு நினைவூட்டுவனவாகும்.
----------------
மு. மேத்தா:

✍ மு. மேத்தா 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி பெரியகுளத்தில் பிறந்தார்.

✍ உவமை உருவகங்களில் பழமையையும், புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான
கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால்
மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை
எழுத ஆர்வம் கொண்டனர்.

✍ இவர் எழுதிய 'ஊர்வலம்" என்ற கவிதை நூலுக்கு தமிழக அரசு முதற்பரிசு
வழக்கியது. 'சோழ நிலா" என்ற நாவலுக்கு ஆனந்த விகடன் பொன்விழாவில்
இலக்கியப் போட்டியில் முதல் பரிசு வழக்கப்பட்டது.

🌹 அன்னை தெரசா 1997 ஆம் ஆண்டு செம்டம்பர் 5 ஆம் தேதி மறைந்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url