Search This Blog

'புளூட்டோ' ஒரு 'குறுங்கோள்' :

'புளூட்டோ' ஒரு 'குறுங்கோள்' :
கண்களுக்குத் தென்படும் கோள்கள் ஆறு.
புதன் (Mercury),
வெள்ளி (Venus),
செவ்வாய் (Mars),
வியாழன் (Jupiter),
சனி (Saturn),
அப்புறம் பூமி? (அட தரையைப் பாருங்கள்).

தொலைநோக்கி கண்டுபிடித்த பின்னர் நெப்டியூன் (Neptune), யுரேனஸ்
(Uranus) கோள்கள் இருப்பது தெரியவந்தது.

பெர்சிவல் லொவல் (Percival Lowell) என்ற அமெரிக்க விஞ்ஞானி, 1905 ஆம்
ஆண்டில் நெப்டியூன், யுரேனஸ் கோள்களின் சுற்றுப்பாதையில் கோள் போன்ற ஒரு
பெரிய பொருளின் ஈர்ப்பு சக்தி தென்படுவதைக் கண்டறிந்தார்.

கிளைட் டாம்பாக் (Clyde Tombaugh) என்ற விஞ்ஞானி 1916 ல் பவெல் கண்ட
ஈர்ப்பு விசை, ஒரு கோளுடையது என்று நிறுவினார்.

இதனை சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோள் என்றுவிஞ்ஞானிகள் அறிவித்தார்கள்.
அந்தக் கோளுக்குத் தற்காலிகமாக பிளானட் X என்று பெயரிட்டார்கள்.

இந்தப் புதிய கோளுக்கு என்ன பெயர் சூட்டுவது என்று பொது மக்களிடம் 1930
ஆம்ஆண்டில் கருத்து கேட்கப்பட்டது.

இங்கிலாந்தைச் சேர்ந்த வெனேஷியா பர்னி ( Venetia Burney) என்ற 11 வயது
சிறுமி, 'புளூட்டோ' என்ற பெயரைப் பரிந்துரைத்தார்.

புளூட்டோ என்பது ஒரு கிரேக்கக் கடவுளின் பெயர்.

மைக் பிரவுன் என்ற விஞ்ஞானி 2006ல் நெப்டியூன் கோளுக்கு அப்பால்
இருக்கும் குய்ப்பர் வளையப் பகுதியில், புளூட்டோவுக்கு இணையான நிறையில்,
நிறைய பொருட்கள் இருக்கின்றன என்று நிரூபித்தார்.

இதனால் புளூட்டோவைக் கோள் என்று கருதக் கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

அவரது வாதத்தை விஞ்ஞானிகள் ஏற்றார்கள்.

அதனால் 2006ல் இருந்து புளூட்டோவின் கோள் அந்தஸ்து பறிக்கப்பட்டு, அது
'குறுங்கோள்' என்று அழைக்கப்படுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url