Search This Blog

பென்சில் பிறந்த கதை

பென்சில் பிறந்த கதை!

இங்கிலாந்தில் பரோடேல் (Burrowdale) என்ற இடத்தில் 1564ஆம் ஆண்டு ஒரு
புயல் அடித்தது.
ஒரு பெரிய ஓக் மரம் வேரோடு சாய்ந்தது.
இடையர்கள் சிலர் அந்த மரத்தின் வேரில் கரி போன்ற ஒரு பொருள்
ஒட்டியிருப்பதைக் கண்டார்கள்.
அது கிராபைட் (Graphite) என்கிற தனிமம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
அதை நிலக்கரி என்று நினைத்து எரித்துப் பார்த்தார்கள்.
அது எரியவில்லை.
அந்தப் பொருளைத் தொட்ட உடன் கையில் மை ஒட்டிக்கொண்டது.
அது நீரில் நனைந்தாலும் அழியாததை கவனித்தார்கள்.
இந்தக் கரியை வைத்து ஆடுகளின் உடலில்அடையாளக் குறி வரைந்தார்கள்.
பிடித்து எழுதும் போது கரி கைகளிலும் ஒட்டிக்கொண்டதால், கரியை நாரால்
சுற்றிக்கொண்டு எழுதினார்கள்.
அந்தக் காலத்தில் நாகரிகம் அடைந்த ஐரோப்பியர்கள் எழுதுவதற்குக் காரீயக்
குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
அதைவிட இந்தப் புதிய கரி பளிச் என்று எழுதியது.
பலரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கரியைச் சுற்றி, நாருக்கு பதிலாக
மரத்தை சீவி உறை போலப் பயன்படுத்தும் முறை பிரபலமானது.
இப்படித்தான் நவீன பென்சில் பிறந்தது!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url