Search This Blog

நீண்ட இணைய முகவரிகளை குறுகிய இணைய முகவரிகளாக மாற்ற உதவும் சிறந்த 5 இணையதளங்கள்

நீண்ட இணைய முகவரிகளை குறுகிய இணைய முகவரிகளாக மாற்ற உதவும் சிறந்த 5 இணையதளங்கள்:

இணைய இணைப்புக்கள் என்பது இன்று வெறும்இணையதளங்களை மாத்திரம் குறித்து
நிற்பதாக அமைவதில்லை.
அவைகள் இணையத்தில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ
கோப்புக்களாக கூட இருக்கலாம்.அந்தவகையில் இணையத்தில்
சேமிக்கப்பட்டகோப்புக்களின் நீண்ட இணைய முகவரியை அல்லது ஒரு இணையதளத்தின்
நீண்டதொரு இணைய முகவரியை குறுகிய ஒரு சில சொற்களுக்குள் உள்ளடக்கி
தருவதற்கு ஏராளமான இணையதளங்கள் உள்ளன.

https://goo.gl/
இதற்கென கூகுள் தரும் goo.gl எனும் இணையதளம் பெரும்பாலானவர்களால்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட
தளத்தில் எவ்வித கணக்குகளையும் ஆரம்பிக்க வேண்டியதில்லை. எனினும் உங்கள்
கூகுள் கணக்கை பயன்படுத்தி இந்ததாளத்தில் உள் நுழைவதன் மூலம் நீங்கள்
பகிர்ந்த இணைப்பை எத்தனை நபர்கள் சுட்டியுள்ளார்கள் என்பதை அறிய
முடியும்.

http://tinyurl.com/
இந்த இணையதளமும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணையதளமாகும்.
நீங்கள் இதில் உள்ளிடும் நீண்ட இணைய இணைப்புக்களுக்கான சுருக்கப்பட்ட
முகவரி
http://tinyurl.com/jdxqkdz என்பது போன்று ஆங்கில எழுத்துக்களை இறுதியாக
கொண்டு பெறப்படும்.
எனினும் இதன் இறுதியில் வரக்கூடிய ஆங்கில எழுத்துக்களுக்கு (jdxqkdz)
பதிலாக நீங்கள் விரும்பும் சொற்களை உள்ளிடுவதற்கும் இதில் வசதி
தரப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு https://www.facebook.com/Tamilinfotech/posts/958800790872429
எனும் நீண்ட முகவரியை
TinyURL தளத்தில் சுருக்கும்போது http://tinyurl.com/ho69jx2 எனும்
முகவரி பெறப்பட்டது இதில் உள்ள ho69jx2 எனும் ஆங்கில எழுத்துக்களுக்கு
பதிலாக Tamilinfotech-Selfie என உள்ளிடவும் முடியும் அவ்வாறு உள்ளிட்டால்
சுருக்கப்பட்ட இணைய முகவரி
http://tinyurl.com/Tamilinfotech-Selfieஎன்பதாக அமையும்.

http://fur.ly/
இந்த இணையத்தளத்தின் மூலம் சுருக்கப்படும் இணைய முகவரிகள்
http://fur.ly/cz85 என்பதாக ஆங்கில எழுத்துக்களையும் எங்களையும்
கொண்டமையும். எனினும் நாம் மேலே கூறிய முறையில் இறுதியில் சேர்க்கப்படும்
எண்கள் எழுத்துக்களுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் ஆங்கில சொற்களையும்
சேர்த்துக் கொள்ள முடியும்.

இது போன்ற வசதிகளை தரும் மேலும் இரண்டு இணைய முகவரிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
http://ow.ly/url/shorten-url

http://mcaf.ee/

references:
http://www.tamilinfotech.com/2016/03/Best-5-Url-Shortener-websites.html

goo.gl/mcqvUC
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url