நிலப்பரப்பும் பெருங்கடல்களும் , Land and Oceans
புவியியல்
நிலப்பரப்பும் பெருங்கடல்களும் , Land and Oceans
1. நிலச்சந்தி: இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீப்பரப்புகளை பிரிக்கக் கூடியதுமான மிக குறுகிய நிலப்பகுதி நிலச்சந்தி ஆகும்.
Isthumus : A narrow strip
of land which connects
two large landmasses or
separates two large waterbodies.
2. டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம்.
December 11 - International
Mountain Day
3.தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.
Dharmapuri Plateau,
Coimbatore Plateau and
Madurai Plateau are found
in Tamil Nadu.
4. ஆற்றுச் சமவெளிகள் பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கின. இந்தியாவில் சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி போன்ற ஆற்றுச் சமவெளிகளில் நாகரிகங்கள் தோன்றி
செழித்தோங்கி வளர்ந்தன.
The plains have been
the cradle of civilisations
from the earliest times.
For example: the Indus in India, the
Nile valley in Egypt are some of the
early civilisations which developed
and flourished.
5. உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் (8,848 மீ மரியானா அகழியில் (10,994 மீ)
மூழ்கிவிடும் என்றால் அதன் ஆழத்தை உணர்ந்தறிவாயாக.
If Mount Everest,
which is the highest
peak (8,848 metres)
was placed into the
Mariana Trench, still there would
be 2,146 metres of water left.
6. கடலின் ஆழத்தை மீ என்ற குறியீட்டால் குறிப்பிட வேண்டும்.
The depth in metres from the Mean
Sea Level is denoted as m−.
7. ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என பெயரிட்டார். பசிபிக்
என்பதன் பொருள் அமைதி என்பதாகும்.
The Spanish navigator
Ferdinand Magellan
named the ocean
Pacific, meaning calm
or tranquil.
8. பாக் நீர்ச்சந்தி வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கிறது.
Palk Strait connects the Bay of
Bengal and Palk Bay.
9. 6° கால்வாய் - இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கிறது.
6° Channel
separates Indira
Point and Indonesia
10. 8° கால்வாய் மாலத் தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது.
8° Channel separates Maldives
and Minicoy islands
11. 9° கால்வாய் லட்ச தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது.
9° Channel separates
Lakshadweep Islands and Minicoy
islands
12. 10° கால்வாய் அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கிறது.
10° Channel separates Andaman
and Nicobar Islands