கொலம்பியா (Colombia) பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
கொலம்பியா (Colombia) பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!
கொலம்பியா தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடு மற்றும் அதன் தலைநகரம் பொகோடா (Bogota) ஆகும்.
கொலம்பியா உலகின் இரண்டாவது அதிக பல்லுயிரினங்கள் கொண்ட நாடு ஆகும்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்களைக் கொண்ட நாடாகவும் கொலம்பியா உள்ளது.
மக்தலேனா நதி (Magdalena River) கொலம்பியாவின் மிக நீளமான நதியாகும். இதன் நீளம் 1,528 கிமீ/950 மைல்கள் ஆகும்.
கொலம்பியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி 590 மீ/1,936 அடி உயரம் கொண்ட லா சோரேரா நீர்வீழ்ச்சி (La Chorrera Falls) ஆகும்.
கொலம்பியாவின் மிக உயரமான மலை பைக்கோ கிறிஸ்டோபல் கோலன் (Pico Cristobal Colon) மற்றும் 5,800 மீ/19,020 அடி உயரம் கொண்டது.
கொலம்பியாவில் உள்ள கானோ கிறிஸ்டல்ஸ் (Cano Cristales) நதி அதன் நிறத்தை மாற்றுவதால் ஐந்து நிறங்களின் நதி (River of Five Colours) அல்லது 'வானவில் நதி" (Rainbow River) அல்லது படிக நதி (Crystal river) என்றும் அழைக்கப்படுகிறது.
கொலம்பியா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, தங்கம் மற்றும் தாமிரம் போன்ற இயற்கை வளங்கள் நிறைந்தது.