கடல் அலை தரும் தூய குடிநீர்!!
கடல் அலை தரும் தூய குடிநீர்!!
உலகின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வல்லமை கொண்டது கடல். ஆனால், அதிலிருக்கும் உப்பை நீக்குவதற்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், கடல் நீர் சுத்திகரிப்பு என்பது சுற்றுச்சூழலுக்கு கேடாவது மட்டுமல்ல, நீரின் விலையையும் அதிகரித்துவிடுகிறது.
இதற்குத் தீர்வாக கடல் அலைகளிலிருந்து மின்சாரத்தை எடுத்து, அதே கடல் நீரை தூய்மைப் படுத்தலாமே? அதைத்தான் செய்கிறது அயர்லாந்தைச் சேர்ந்த ரிசலூட் மரீன்.
சக்தி வாய்ந்த கடல் அலைகள் முன்னும் பின்னும் அடித்துச் செல்கையில் பெரும் விசை உண்டாகிறது.
கடல் தரையில் ஒரு தடுப்பு போன்ற கருவியை உருவாக்கி, அந்த விசையை உள்வாங்கினால், 24 மணி நேரமும் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை ரிசலூட் மரீன் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடலலையில் மின்சாரம் தயாரிக்கும் அத்திட்டத்திற்கு 'வேவ் டூ ஓ" என்று பெயர். தற்போது கேப் வெர்டே என்ற சிறிய தீவு நாடு குடிநீர் பஞ்சத்தில் இருப்பதால், அதை வேவ் டூ ஓ தொழில்நுட்பத்தை அங்கு செயல்படுத்த ரிசலூட் மரீன் வேலை செய்து வருகிறது.
கடல் அலை ஆற்றலை வைத்தே, கடல் நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பத்திற்கு நிச்சயம் உலகெங்கும் வரவேற்பு இருக்கும்.