Search This Blog

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக மாநில பாடலாக அறிவிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழக மாநில பாடலாக அறிவிப்பு

 தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக மாநில பாடலாக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட நாடக நூலான மனோன்மணீயம் நூலில் 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பிலுள்ள பாடலின் ஒரு பகுதியை தமிழ்த்தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை 1970ம் ஆண்டு நவ.,23ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து, அரசாணை வெளியிட்டார்.

 அவ்வரசாணையை தொடர்ந்து, தமிழகத்தில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது. இப்பாடல் வரிகளை 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திசுரம்) பாடப்பட வேண்டும். தமிழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொது நிகழ்ச்சிகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களை கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url