உயர் அழுத்த சமையற்கலனில் (Pressure Cooker) உணவு விரைவாக சமைக்கப்படுகிறது. ஏன்?
உயர் அழுத்த சமையற்கலனில் (Pressure Cooker) உணவு விரைவாக சமைக்கப்படுகிறது. ஏன்?
🔆 உயர் அழுத்த சமையற்கலனில் வெப்பநிலை அதிகரிக்கப்படும் போது அதன் உள்ளே உயர் அழுத்தம் உருவாகிறது.
🔆 இவ்வுயர் அழுத்தம் நீரின் கொதிநிலையை அதிகரிக்கிறது.
🔆 எனவே கலனின் உள்ளே நீரானது 100°C க்கு மேலும் திரவ நிலையிலேயே உள்ளது. ஆதலால் உணவு விரைவாக சமைக்கப்படுகிறது.