லேசர் அடுப்பில் சமைத்த கோழி..!
லேசர் அடுப்பில் சமைத்த கோழி..!
🐥 லேசர் அடுப்பு 🐥
🍗 உணவுப் பண்டங்களை முப்பரிமாண இயந்திரத்தில் அச்சிடும் முயற்சி பல ஆய்வகங்களில் வெற்றிகண்டு வருகிறது.
🐓 பண்டங்களை, பல வண்ணங்களில், வடிவங்களில் துல்லியமாக அச்சிட முடிந்தாலும், அவற்றை சரியான பதத்தில் சமைப்பது மட்டும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.
🍗 அமெரிக்காவிலுள்ள, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (Columbia University), கிரியேட்டிவ் மெசின்ஸ் லேப் (Creative Machines Lab) உள்ளது.
🐓 இங்கு தோசை, கேக், இறைச்சி என பலவித உணவுகளை முப்பரிமாண அச்சியந்திரத்தில் அச்சிட்டு எடுக்கும் ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது.
🍗 அண்மையில், இங்கு நீல லேசர் கதிர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு, கோழி இறைச்சிக் கைமாவை வேக வைக்கும் முயற்சி நடந்தது.
🐓 அதாவது அதன் மீது லேசர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்கள் சில நிமிடங்கள் பாய்ச்சப்பட்டன. மொத்த இறைச்சியும் உருமாறாமல் வெந்து, அசல் கோழிக்கறி சமையல் மணம் வீசியது.
🍗 சில தன்னார்வலர்களுக்கு வழக்கமான முறையில் சமைத்த கோழிக்கறியையும், லேசரில் வேக வைத்த கறியையும் தந்து கருத்துக் கேட்டனர்.
🐓 கண்களைக் கட்டியபடி அவர்கள் இரு உணவையும் உண்டனர். இறுதியில், அனைவருமே அடுப்பில் வெந்த கறியைவிட, லேசரில் வேகவைத்த கோழி நெஞ்சுக்கறியைத் தான் சுவையாக, மணமாக இருப்பதாக தேர்ந்தெடுத்தனர்.
🍗 இதில் கூடுதல் பலனாக, அடுப்பில் வெந்த கறி சற்று அதிகமாகவே சுருங்குவது தெரியவந்தது. லேசரில் வேகவைக்கும்போது இறைச்சி அவ்வளவாக சுருங்காததோடு, ஈரப்பதமும் குறைந்துவிடாமல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.