நவம்பர் 26 - இந்திய அரசியல் சாசன தினம் :
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதல்முறையாக 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாகவும்இ நினைவுகூறும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும் இந்திய அரசால்இ அரசியல் சாசன தினம் துவங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.