நவம்பர் – 19 அனைத்துலக ஆண்கள் நாள் ( International Men's Day):
அனைத்துலக ஆண்கள் நாள் ( International Men's Day) என்பது 19 நவம்பர் அன்று கொண்டாடப்படும் வருடாந்த பன்னாட்டு நிகழ்வாகும். 1999 இல் ரினிடட் மற்றும் டோபாகோவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பலதரப்பட்ட தனியார் மற்றும் குழுக்களினால் அவுஸ்திரேலியா, கரீபியன், தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து இதற்கு ஆதரவளிக்கப்பட்டது.
யுனெஸ்கோ சார்பாக பேசிய, பெண்கள் மற்றும் சமாதான கலாச்சார இயக்குனர் "இது ஒரு சிறப்பான சிந்தனையும், சில பால் சமத்துவத்தினை வழங்கக்கூடியதுமாகும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் யுனெஸ்கோ ஒழுங்குபடுத்துனர்களுடன் இது தொடர்பில் ஒத்துழைப்புச் செய்ய எதிர்பார்க்கிறது எனவும் தெரிவித்தார்.