அக்டோபர் – 15 உலக கைகழுவும் தினம் (Global Handwash Day):
முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன.
இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன.
கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம்,
வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும்.
ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.