ஏப்ரல் 24 - தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் ( National Panchayati Raj Day):
ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு தேசிய நாளாகும். இக்கொண்டாட்டத்தை
பஞ்சாயத்து இராச்சிய அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது.
மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள். அரசு அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பரவலாக்கவும், மக்கள் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வார்த்தையளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது அவசியமாக உள்ளது.
பஞ்சாயத்துகள் வலுவாக இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும். இத்தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.