Search This Blog

ஏப்ரல் - 14 தேசிய தீயணைப்பு சேவை தினம் (National Fire Service Day):

தீயால் அழியாதது எதுவுமில்லை.
பெரும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தேவை. ஒரு தீயணைப்பு வீரர் பணியில் சேரும்போதே உயிர்த்தியாகத்திற்கு தயாராகி விடுகிறார். பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் .
தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14 அன்று தேசிய தீயணைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது . பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஏப்ரல் 14 அன்று அஞ்சலி செலுத்துகின்றனர். 1944 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெடி மருந்துகள் தாங்கிய கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது . இதனால் துறைமுகத்திற்குப் பெரும் சேதாரம் ஏற்பட்டது . பல கப்பல்கள் பாழடைந்தன . தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும்,
பணியாளர்களும் போராடினர் . இந்த விபத்தில் 249 பணியாளர்கள் உயிரிழந்தனர் . இந்த விபத்து ஏப்ரல் 14 அன்று நிகழ்ந்தது. இவர்களின் தியாகத்தை நினைவு கூறவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url