மார்ச்18: இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம் :
மார்ச்18: இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம்
ராணுவ தளவாட தொழிற்சாலைகள் தினம் மார்ச் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ தளவாட தொழிற்சாலை இயங்கி வருகிறது. இது துப்பாக்கி, பீரங்கி உள்பட பல ராணுவ போர்க்கருவிகளை உற்பத்தி செய்து, சோதனை, ஆராய்ச்சி ஆகியவற்றை நிலம், கடல், வான் பகுதியில் செய்து வருகிறது. இப்பாதுகாப்பு அமைச்சகம் கொல்கத்தாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பொருளாதார நலன்களை பாதுகாக்க, அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்த கொல்கத்தாவில் முதன்முதலாக ராணுவ தளவாட உற்பத்தியை 1775ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி கோட்டை வில்லியம் மூலம் தொடங்கியது.