டிசம்பர் 20- சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் (International Human Solidarity Day):
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியில் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள், அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்படவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.