Search This Blog

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children's Book Day :
ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள்
கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் ( Hans
Christian Andersen) (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின்
பிறந்த நாள் ஆகும்.
"இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்"
(International Board on Books for Young People - IBBY) என்னும்
பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit
Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


நோக்கம்:
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்.
குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url