மார்ச் - 23 - உலக வானிலை ஆய்வு தினம் (World Meteorological Day)
உலக வானிலை ஆய்வு தினம்
(World Meteorological Day)
மார்ச்,22,2016.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது பூமி ஒரு
செல்சியுஸ் டிகிரி அதிக வெப்பமாக உள்ளது என்றும், பூமியின் வெப்பநிலை
மூன்று செல்சியுஸ் டிகிரியை எட்டாதபடி தவிர்ப்பதற்கு, தேசிய அளவில்,
நாடுகள் எடுத்துள்ள திட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஐ.நா. நிறுவனம்
ஒன்று எச்சரித்துள்ளது.
மார்ச் 23, இப்புதனன்று, உலக வானிலை ஆய்வு தினம் கடைப்பிடிக்கப்படுவதை
முன்னிட்டு, 2015ம் ஆண்டில் இப்பூமியின் வெப்பநிலை குறித்து ஆய்வறிக்கை
வெளியிட்டுள்ள, WMO என்ற உலக வானிலை ஆய்வு நிறுவனம் இவ்வாறு
எச்சரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையை ஜெனீவாவில் இத்திங்களன்று வெளியிட்டுப் பேசிய
இந்நிறுவனப் பொது இயக்குனர் Petteri Taalas அவர்கள், வருங்காலம் இப்போதே
நடந்துகொண்டிருக்கிறது, எனவே கார்பன் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த
உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார்.
தற்போதைய எரிபொருள் பயன்பாட்டில் வரையறைகள் இல்லையெனில், வான்வெளியில்
கார்பன் டை ஆக்ஸைடின் சேமிப்பு, இன்னும் 500 ஆண்டுகளில் ஐந்து மடங்கு
அதிகரிக்கும், அதாவது, அச்சமயத்தில், இப்பூமியின் வெப்பநிலை, ஏழு முதல்
எட்டு செல்சியுஸ் டிகிரியாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார் Taalas.
மார்ச் 23, இப்புதன், உலக வானிலை ஆய்வு தினம்
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொல
http://ta.radiovaticana.va/news/2016/03/22/கார்பன்_வெளியேற்றத்தைக்_கட்டுப்படுத்த_அவசர_நடவடிக்கை_அவசியம்/1217315