Search This Blog

《மேற்கிந்தியத் தீவுகள் (West Indies)》🖌

《மேற்கிந்தியத் தீவுகள் (West Indies)》🖌:

         மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல், கரிபியன் கடல்  பகுதியிலுள்ள  மண்டலம் ஆகும். இது அண்டிலீசு, லுகாயன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகளையும் தீவு நாடுகளையும் உள்ளடக்கி உள்ளது.
     
        அமெரிக்காக்களுக்கான கொலம்பசின் முதல் கடற்பயணங்களை  அடுத்து ஐரோப்பியர்கள் மேற்கிந்தியத் தீவுகள் என்ற இந்தப் பொருந்தாப் பெயரை கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து (தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியா) வேறுபடுத்திக் குறிப்பிட பயன்படுத்தினர்.

       வடக்கில் பெரிய அண்டிலிசு, தெற்கிலும் கிழக்கிலும் சிறிய அண்டிலிசு உள்ளடக்கிய கரிபியன் தீவுகள், பெரிய  தொகுப்பில் அடக்கமாகும்.

        மேற்கிந்தியத் தீவுகளில் இத்தீவுக்கூட்டங்களைத் தவிர பெரிய அண்டிலிசுக்கும் கரிபியக் கடலுக்கும் வடக்கே உள்ள லுகாயன் தீவுக்கூட்டத்தையும்  (பகாமாசு மற்றும்துர்கசு கைகோசு தீவுகள்) உள்ளடக்கியது.

        பரந்த கோணத்தில் பெருநிலப் பகுதியில் உள்ள பெலீசு, வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானா  நாடுகளும் மேற்கிந்தியத் தீவுகள் வரையறைக்கு உட்படுகின்றன. .

《தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனக் குறிப்பிடப்படுபவை》

★பகாமாசின் தீவுகள்
★கியூபா
★ஜமேக்கா
★எயிட்டி
★டொமினிக்கன் குடியரச
★புவேர்ட்டோ ரிக்கோ
★லீவர்டு தீவுகள் & வின்வர்டு தீவுகள்

https://ta.wikipedia.org/s/220w

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url