Search This Blog

சிலிக்கா ஏரி chilikka lake

சிலிக்கா (Chilika) ஏரியின் கரையில் ஒருவரை நிறுத்தி, 'இதுதான் கடல்'
என்று சொன்னால் நம்பிவிடுவார்கள். அவ்வளவுபெரிய ஏரி.

ஆமாம், ஆசியா கண்டத்திலேயே பெரிய ஏரி இதுதான். ஆனால் முழுக்கவும் உப்பு தண்ணீர்.
கடலின் முகத்துவாரத்தில் இருப்பதால், கடல் நீருடன் கலந்து உப்பாக இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் பூரி, குர்தா, கஞ்சம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்த
ஏரி விரிந்து கிடக்கிறது. அப்படியானால் இது எவ்வளவு பிரம்மாண்டம் என்று
பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஏரியைச் சுற்றி 132 கிராமங்கள்
இருக்கின்றன. அந்தப் பகுதி மக்களுக்கு ஏரியில் மீன் பிடிப்பதுதான்
முக்கியத் தொழில். டால்பின்கள் கூட இதில் வசிக்கின்றன.மீன்கள் மட்டுமல்ல,
150 வகைக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளுக்கும் இது
சரணாலயமாக விளங்குகிறது.

எழுநூறுக்கும் அதிகாமான தாவர இனங்களும் ஏராளமான உயிரினங்களும், ஏரியைச்
சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளில் வாழ்கின்றன. ஏரியின் அழகை ரசிக்க
தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ஏரியில்
படகு சவாரி செய்வது ஜாலியோ ஜாலி என்கின்றனர் போய் வந்தவர்கள்.

1,100 சதுர கி.மீ. பரப்பளவு

64.3 கி.மீ. நீளம்

18 கி.மீ. அகலம்

முக்கியமான மூல நதிகள்:
தயா நதி, பார்கவி நதி, மலகுனி நதி

நாமும் ஒருக்கா... போய்ட்டு வரலாம் சிலிக்கா!

சதுப்பு நிலக் காடுகளுக்கு வேறு பெயர் 'அலையாத்திக் காடுகள்' (Mangrove).

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29968&ncat=1360
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url